The seed of agony
- Thamizhkkizhavi

- Nov 26, 2020
- 1 min read
A poem by: Thiru. Thirukumaran
Translated in to English by: Gugatharsani Rajeevan
வேதனையின் விதை ————————— வேதனை தாளாமல் நாமெல்லாம் இறந்துகொண்டிருந்தபோது அவன் பிறந்தான் வேதனை சுமந்து பெற்ற விதை அவன்
கண்ணை மறைக்கும் வெற்றிக் கற்பனைகளில் அவனொருபோதும் மிதந்ததில்லை ஆனால் தான் நட்ட விதை துளிர்க்குமென்ற நம்பிக்கை அவனிடம் இருந்தது
பெரு விம்பமாய் அவனை ஆக்கியது வெறும் பேச்சல்ல,பேராற்றல்
புனைந்து காட்ட மட்டுமே பலரால் முடிந்த போது அவன் நிகழ்ந்து காட்டினான்
சுயபரிசோதனையெனும் பேரில் இங்கிதம் வழியும் தந்திரம் நிறைந்த ஆயிரம் முகமூடிகளை நீங்கள் அணிந்து கொண்டாலும் அவனில்லாத விடுதலைக்காலத்தை எதைத்தோண்டினும் உங்களால் எடுத்துவிட முடியாது..
-திரு. திருக்குமரன்.




Comments